Thursday, September 10, 2026
LatestNEWS

கொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்!

தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களில் 2வது இடத்தில் தமிழகம் தற்போது உள்ளது.

அதில் 74 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதன் மூலம் மாநாட்டில் பங்கேற்ற 264 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளது மேலும் கோரோனா பாதிப்பு இருந்த குடும்பத்தினர் அவர்கள் அந்த அந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.


Comments are closed.