விழுப்புரத்தில் எரிக்கப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ மரணம்

விழுப்புரம் அருகே முன்பகை விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட, பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி நேற்று அவரது வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.

நேற்று (மே10) காலை 11:30 மணியளவில் தூங்கி கொண்டிருந்த போது இவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைதத்துவிட்டு தப்பியதாக தெரிகிறது.

95 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் மாணவி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட, நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக எஸ்.பி., ஜெயக்குமார், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Comments are closed.

https://newstamil.in/