டிக்-டாக் விபரீதம் – காதல் தோல்வி பெண் டிக்டாக்கில் தற்கொலை வீடியோ
“கணவரை உருகி உருகி காதலிக்கும் இப்படிப்பட்ட பெண்ணை கைவிட எப்படி மனசு வந்ததோ” என காதலர் தினத்தன்று சமூக வலைத்தளங்களில் பரிதாபத்தை வாரிக் குவித்த பெண், விஷம் குடித்துவிட்டதாக வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ஓரிரு நாட்கள் பிரபலமடையும் சிலர் அது அடங்குவதற்குள் சில விபரீதங்களையும் சந்தித்து விடுகின்றனர். அப்படி சிலநாட்களுக்கு முன்பு காதல் கணவரால் கைவிட்டுவிட்டதாக பேசி வெளியிட்ட வீடியோவால் சமூக வலைதளங்களில் திடீர் பிரபலமானார் இந்த பெண். அந்த வீடியோவால் பலரின் பாராட்டை பெற்ற அந்த பெண் தற்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான அந்த பெண்ணின் ஜாடையை ஒத்தது போன்று ஒருபெண் அவரது ஆண் நண்பரோடு இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவத் தொடங்கியது. யாரோ ஒரு இளைஞனுடன் வேறு ஒரு பெண் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு, இப்படிப்பட்ட பெண்ணை கணவன் கைவிடாமல் என்ன செய்வான் என பதிவுகள் வெளியாகின.
இதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாயில் ரத்தம் வழிய, விஷத்தை குடித்துவிட்டதாக அந்த பெண் போட்டுள்ள டிக்டாக் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொய்யாக பரப்பப்படும் வீடியோவால் மிகுந்த வேதனையில் இருப்பதாக தெரிவித்திருக்கும் பெண், தங்கையுடன் தற்கொலை செய்து கொள்ளபோவதாக வெளியிட்டுள்ள வீடியோ வலைதள வாசிகளை அதிர்சியடைய வைத்துள்ளது.
Comments are closed.