ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 4, 2026
ENTERTAINMENT

சூர்யா, வெற்றி மாறன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூரரைப்போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா – வெற்றிமாறன் இணையும் புதிய படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வெற்றி மாறன் இயக்கத்தில் சென்ற வருடம் வெளிவந்து மிக பெரிய அளவில் வெற்றியடைந்த படம் தான் அசுரன்.

இப்படத்தை தொடர்ந்து முதன் முறையாக நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்துள்ளார் வெற்றிமாறன். மேலும் இப்படத்தை முன்னனி தயாரிப்பாளர் எஸ். தாணு அவர்கள் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளார். இது அவருக்கு 75-வது படம். வடசென்னை தவிர்த்து அனைத்து படங்களிலும் வெற்றிமாறனுடன் பணியாற்றி ஹிட் பாடல்களைக் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திலும் இணைந்துள்ளார்.