மதுபான விலை தமிழகத்தில் ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு
சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்தி இன்று ( மே.06) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 மி.லி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் 07.05.2020 முதல் உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
Comments are closed.