தமிழகத்தில் 4 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஒரு வயதுக்கூட நிரம்பாத 4 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பிறந்து 3 நாட்கள், 10 நாட்கள் ஆன இரண்டு ஆண் குழந்தைகள், 50 நாட்களான ஒரு பெண் குழந்தை என சென்னையில் ஒரே நாளில் 3 பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கடலூரில் இன்று பாதிக்கப்பட்ட 122 பேரில் ஒரு வயதுக்கூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/