விஷ்ணு விஷால் சிக்ஸ் பேக் – வெளியிட்ட வீடியோ!

நடிகர் விஷ்ணு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார், கடைசியாக ராட்சசன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். தற்போது காடன், ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஷ்ணு கடந்த சில வருடங்களாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். விவாகரத்து, உடலளவில் பல ஆபரேஷன்கள் சந்தித்தது என மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இப்படியே போனால், நிலைமை மோசமாகி விடும் என நினைத்த விஷ்ணு விஷால் மீண்டும் கம்பேக் ஆக முடிவு செய்தார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் எனும் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, எஃப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி சில கஷ்டங்களில் இருந்து மீண்டு வர அவர் எடுத்த ஆயுதம் உடற்பயிற்சி. இப்போது உடற்பயிற்சிகள் கடுமையாக மேற்கொண்டு ஆளே மாறியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது அவர் தன்னை மாற்றிக் கொள்ள எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்ன செய்தேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “சினிமாவுக்கு வந்த பின் தான் ஆல்கஹாலுக்கு அடிமையானேன் . சினிமாவுக்கு வந்த பின் சோசியல் ட்ரிங்கிங் என்றுதான் ஆரம்பித்தோம். ஆனால் ஆல்கஹாலுக்கு அடிமையானது எனக்கே பிடிக்கவில்லை. கடைசி இரண்டு மாதங்களில் நான் சுத்தமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்ளவில்லை.

நான் இதுவரை செய்யாத ஒன்றை செய்து முடிக்கும் போது பாசிட்டிவ்வான எண்ணங்கள் கிடைக்கும் என்றுதான் சிக்ஸ் பேக் வைத்தேன். எனது நீண்ட நாள் கனவின் முதல்படி தான் இது” என்று கூறியுள்ளார்.Comments are closed.

https://newstamil.in/