ஆந்திர விஷவாயு கசிவு பலி 13 ஆக உயர்வு
ஸ்டைரின் வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து வாயு வெளியேறி சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.
ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி திறக்கப்பட்டதால் வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக குறைந்த ஆட்களே பணியில் இருந்தாதல் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என மாநில டிஜிபி கூறியுள்ளார்.
வீடுகளுக்கு வெளியே காற்றில் ஸ்டைரின் வாயு மிகவும் அடர்த்தியாக இருந்தால் பல பேர் சாலைகளில் மயங்கிச் சரிந்தனர். இந்த விபத்தில் 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 8 பேர் இதுவரை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 5 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட டாங்கில் இருந்து வாயு வெளியேறியுள்ளது. ஊரடங்கு காரணமாக, இந்த டாங்குகள் பராமரிப்பு செய்யவில்லை. இதனால், வேதியியல் மாற்றங்கள் உண்டானது. அதற்குள், வெப்பம் உண்டானது. இதனால், வாயு கசிவு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.