Thursday, September 10, 2026
ENTERTAINMENTVIDEOS

அந்தமானுக்கு பறந்த மதுமிதா: ‘அய்யனார் துணை’ டீம் உடன் நடிகையின் வைரல் ட்ரிப்!

தமிழ் டெலிவிஷன் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகை மதுமிதா, தற்போது தனது புதிய பயணத்தால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு கன்னட தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான Shani தொடரின் மூலம் நடிப்புலகில் அறிமுகமான மதுமிதா H., தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.

தமிழில் 2022 முதல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி பெரும் ஹிட் ஆன எதிர்நீச்சல் தொடரில் “ஜனனி சக்திவேல்” கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா, மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாசத்தையும், ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்றார். கடந்த ஆண்டு முடிந்த எதிர்நீச்சல் தொடரின் அடுத்த பாகத்தில் அவர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

தற்போது, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான அய்யனார் துணை சீரியலில் “நிலா” எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வருகிறார். இந்த தொடரும் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், அய்யனார் துணை தொடரில் இணைந்து நடிக்கும் சக நடிகர், நடிகைகளுடன் சேர்ந்து அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவுக்கு பயணம் செய்துள்ளார் மதுமிதா. பசுமையான சூழலும், கடற்கரை அழகும் நிறைந்த அந்தமானில் இருந்து மதுமிதா பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

ரசிகர்களும், டீம் உறுப்பினர்களும் அவரது இந்த ட்ரிப் அப்டேட்ஸை ஆர்வத்துடன் பின்தொடர்ந்து வருகின்றனர்.