தமிழகத்தில் இன்றுடன் பலி 14 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, 11,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 9,756 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,306 பேர் குணமடைந்துள்ளனர். 377 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இருவர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், சுகாதாரத்துறையினரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tag: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *