ஏழைகளின் உயிராதாரப் பிரச்சனைக்கு பிரதமரின் பதில் என்ன – ப.சிதம்பரம் கேள்வி

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருவதால் மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என பிரதமர் மோடி இன்று அறிவித்திருந்தார். நடுத்தர மக்களுக்கான நிவாரண நிதி சார்ந்த அறிவிப்புகள் ஏதும் அவர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், அரசிடம் பணம் உள்ளது. உணவு உள்ளது. ஆனால், அரசு தரமறுக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில், ‘பிரதமரின் புத்தாண்டு வாழ்த்தை நாங்கள் பரஸ்பரம் ஏற்கிறோம். ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறோம். நாங்கள் அந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், அந்த ஊரடங்கு உத்தரவைக் கடந்து பிரதமர் புதிய புத்தாண்டு செய்தி என்ன? இது நிச்சயமாக ஏழைகளின் உயிராதாரப் பிரச்னை? அவர்களின் இருத்தல் குறித்த பிரச்னை.

ரகுராம் ராஜன் முதல் ஜீன் ட்ரீஸ் வரை, பிரபாத் பட்நாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை அவர்களின் அறிவுரை, காது கேளாத ஆண்டுகளில் விழுந்துள்ளது. நடைமுறையில் உணவைக் கோருவது உட்பட, ஏழைகள் 21+19 நாட்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ள விடப்பட்டுள்ளனர்.

பணம் இருக்கிறது, உணவு இருக்கிறது, ஆனால் அரசாங்கம் எதையும் கொடுப்பதற்கு தயாராக இல்லை. என்னுடைய அன்புக்குரிய நாட்டுக்காக அழுகிறேன்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/