நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்; பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடத்தில் தமிழகம் 2வது?

பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் அடிப்படையில், நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளதாக என புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு நிர்வாகத்திறன் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில், நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், பொது மக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், முதலிடத்தையும், பொது சுகாதாரத்துறையில் 2வது இடத்தையும், சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும், வேளாண்மையில் 9வது இடத்தையும், வணிகத்தில் 14வது இடத்தையும், மனித வள மேம்பாட்டில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினின் ட்விட்டர் பதிவில், “அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் (@CHILDLINE1098) தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும்,காவல்துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 73 சதவீத பாலியல் வன்கொடுமைகள் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்கு அறிந்தவர்களாலேயே நடக்கிறது என புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத 10 மாநிலங்களின் பட்டியலும் அண்மையில் வெளிவந்தன. அதில், கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதே போல் மேற்கு வங்கம், கர்நாடகா நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. மத்திய பிரதேசம் ஆறாவது இடத்திலும், ஆந்திர பிரதேசம் ஏழாவது இடத்திலும், உத்திரபிரதேசம் எட்டாவது இடத்திலும் உள்ளன. மேலும் டெல்லி மற்றும் சட்டீஸ்கர் முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளது.



Comments are closed.

https://newstamil.in/