தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பால், காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் இன்று மாலை 6 மணி முதல் மூடப்படுகின்றன.

கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நலவாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக, தலா ரூ.1000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

இந்நிலையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும் .இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாதவர்களுக்காக, இருக்கும் இடத்திற்கே சென்று சூடான சுவையான உணவு வழங்கப்படும்.

நடைபாதை கடைகாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் கட்டிட தொழிலாளர்கள்,ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும்.

ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.

மார்ச் மாத ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள் ஏப்ரல் மாதம் வாங்கிக் கொள்ளளலாம்என்றும் அறிவித்துள்ளார்.


84 thoughts on “தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/