‘பாலியல் சீண்டல்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுங்கள்’ – வைரமுத்துவை மீண்டும் தாக்கும் சின்மயி
வைரமுத்து மீது பாலியல் புகார்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி அதன்பின்னர் பல முறை அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் பிரபல் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளது.
இந்நிலையில் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் வைரமுத்து பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார் “அவரது மொழி புலமைக்காக தான் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்பதை நான் நன்கு அறிவேன். ஆம், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம்.
நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெல்டன் தனியார் பல்கலைக்கழகமே, உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.
Comments are closed.