19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரர்கள்!
இந்திய நாட்டில் நாளுக்கு நாள் வன்கொடுமைகள் பெருகி வருகின்றன.. நிர்பயா, கத்துவா சிறுமி, உன்னாவ் பெண், ஹைதராபாத் டாக்டர், இன்னும் எத்தனையோ இளம்பெண்கள் காம கொடூரர்களால் காவு வாங்கப்பட்டுள்ளனர், இன்னும் உயிர்பலி எடுக்கும் அவலமும் தொடர்கிறது.
குஜாத்தில் ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தன் சகோதரியுடன் மொடாசா என்ற நகருக்கு சென்றார். சகோதரி மட்டும் வீடு திரும்பிய நிலையில், அதிக நேரமாகியும் அந்த பெண் மட்டும் வீடு திரும்பவில்லை.
இந்த சம்பவம் 2019ஆம் ஆண்டின் கடைசி நாளான கடந்த 31ஆம் தேதி நடந்தது. குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் பெண் கிடைக்கவில்லை.
அதனால் விடிந்ததும் ஜனவரி 1-ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர். அதனடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, பிமல் பர்வாட் என்பவர் காரில் கடத்தி சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து.
அதனடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, பிமல் பர்வாட் என்பவர் காரில் கடத்தி சென்றதாகவும், யாரிடமும் சொல்லக்கூடாது என்று தன்னை மிரட்டியதாகவும் சொன்னார்.
இதன்பிறகு, ஜனவரி 3-ம் தேதி பெண்ணின் பெற்றோரை அழைத்து, “பிமலும் உங்க பொண்ணும் கல்யாணம் செய்துகொண்டிருப்பார்கள்.. சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜனவரி 5ஆம் தேதி இந்த கிராமத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் ஒரு பெண்ணின் சடலம் தொங்குகிறது என்ற தகவல் கிடைத்து. பெற்றோர், காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தப்போதுதான் தெரிந்தது அது காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் என்பது.
இதையடுத்து உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பினால், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதற்கு பிறகு 7-ம் தேதி, உயிரிழந்த பெண்ணின் தாத்தா புகார் தரவும், அப்போதுதான் வழக்கு பதிவு செய்தனர்.
அதன்பிறகு அப்பெண்ணை கடத்திய பிமலை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் பெண்ணை கடத்தியது என் நண்பர்கள் தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வாட், ஜிகார், இந்த 3 பேர்தான் என்றார்.
இதை கேட்டு கிராம மக்களே கொந்தளித்துவிட்டனர்.. தர்ணா, மறியல், முற்றுகை என அகமதாபாத் ஆஸ்பத்திரி முன்பு ஆவேசத்துடன் ஈடுபட்டனர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியிட வேண்டும், அந்த 3 பேரும் கைதாக வேண்டும், இவ்வளவு நாள் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காத அந்த இன்ஸ்பெக்டர் ரபாரி மீது நடவடிக்கை வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த குஜராத் துணை டிஜிபி சமாதானம் பேசினார், குற்றவாளிகள் கைதாவார்கள் என்று உறுதி அளித்தார். இளம் பெண்ணை கடத்தி, பலாத்காரம் செய்து, கொன்று தூக்கிலும் தொங்க விட்டுள்ள இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது.