விஜய் தான் டாப்பு; அஜித்துக்கு அடுத்தது தான் ரஜினி!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான பிகில் திரைப்படம் திரையரங்குகளில் 60வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
“பிகில்” வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது. பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக விஜய் நடித்திருந்த அப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
அக்டோபர் 12ம் தேதி வெளியான “பிகில்” படத்தின் டிரெய்லரை இதுவரை 48 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். மேலும் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளதால், “பிகில்” திரைப்படம் இந்திய படங்களிலேயே அதிகம் லைக் செய்யப்பட்டது என்ற கூடுதல் பெருமையை பெற்றுள்ளது.
அதே சமயத்தில் கடந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த அஜித்தின் “விஸ்வாசம்”, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “பேட்ட” ஆகிய படங்கள் மிகப்பெரிய வித்தியாசத்துடன் பின்னடைவை சந்தித்துள்ளன. அதில் வரிசைப்படி இரண்டாவது இடத்தில் இருப்பது நம்ம தல நடித்த “விஸ்வாசம்” திரைப்படம். இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு தல பொங்கல் என்று சொல்லும் அளவிற்கு பேமிலி எண்டர்டெயின்மெண்ட் மூவியான “விஸ்வாசம்” செம்ம மாஸ் காட்டியது.
விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியாகி இதுவரை 11 மாதங்கள் கடந்துள்ள நிலையில், யு-டியூப்பில் இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். 13 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
அடுத்ததாக அதே பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “பேட்ட” திரைப்படத்தின் டிரெய்லரை 26 கோடி பார்வையாளர்கள் மட்டுமே கண்டு ரசித்துள்ளனர். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பெரிதாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இல்லாதேதே காரணம் என்று கூறப்படுகிறது.
Comments are closed.