பெண்கள் உடை மாற்றுவதை ரகசிய வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்

கோவை பெட்ரோல் பங்க் ஒன்றில் பெண்கள் டிரஸ் மாற்றுவதை பாத்ரூமில் செல்போன் கேமிராவை வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.பெட்ரோல் பங்க் பெண் ஊழியர்களுக்கு இப்படி ஒரு அவலம் நடந்துள்ளது.

கோவை கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மனைவியுடன் சாய்பாபா காலணி அருகேயுள்ள ரூட்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தனது நிறுவனத்தின் அதிகாரிகள் தாக்கியதாக கூறி மணிகண்டன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டன், 4 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க்கில் உள்ள துணி மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு தனது மனைவி உள்ளிட்ட பெண்கள் உடை மாற்றுவதை சூப்பர்வைசர் சுபாஷ் வீடியோ எடுத்ததாகவும், இது தொடர்பாக தான் அதிகாரிகளிடம் புகார் அளித்ததை தொடர்ந்து சுபாஷ் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தன்னை பழிவாங்கும் நோக்கத்தில், பங்க் அதிகாரிகளே, பெட்ரோலை திருடச் சொல்லி, அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, தன்னை அடித்து துன்புறுத்தினார்கள் என்று சாய்பாபா காலனி போலீசில் புகார் தந்தார், ஆனால் இது சம்பந்தமாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது.

இது பற்றின விசாரணை மணிகண்டனிடம் துரிதமாக ஆரம்பமானது, அப்போது பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றும் வீடியோவை எடுத்தது உண்மைதான் என்றும் ஆனால் அந்த வீடியோவை எடுத்தது தான் இல்லை, சூப்பர்வைசர் சுபாஷ் என்ற முன்னாள் ஊழியர் என்றும் மணிகண்டன் கூறுகிறார். சுபாஷ் என்பவர் இந்த பங்கில்தான் வேலை பார்த்திருக்கிறார், பெண்கள் உடை மாற்றும் அறைக்கு இந்த சுபாஷ்தான் சூபர்வைசராக இருந்திருக்கிறார்.

இது குறித்து ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கவிதாசன், ஊழியர் மணிகண்டனை தாக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் 4 மாதங்களுக்கு முன்பு நடந்த வீடியோ விவகாரத்திற்கும், இந்த பிரச்சனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/