60 வயது கள்ளக்காதலன் கொலை செய்த 23 வயது பெண்! – தலை சுற்றும் வாக்குமூலம்

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நெருக்கமாக இருக்கும் படத்தை காட்டி மிரட்டி, திருமணத்தை தடுக்க நினைத்தவரை, கத்தியால் குத்தி பெண்ணே, கொலை செய்த சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்துள்ளது.

சென்னை அடுத்து திருவொற்றியூர் சாத்தாங்காடு மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர் என அழைக்கப்படும் அம்மன் சேகருக்கும், சாத்துமா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீஸார் விசாரித்தபோது அந்தப் பெண் கூறிய ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.

“சேகரின் மகளும் நானும் தோழிகள். அதனால் தோழியைச் சந்திக்க சேகர் அங்கிள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவர் என்னோடு அன்பாகப் பழகினார். அவரால் என் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது” என்று கண்ணீர்மல்க போலீஸாரிடம் கூறியுள்ளார்.

அந்த பெண்ணை சேகர் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் அவர் கூறுகையில் சில ஆண்டுகளுக்குமுன் ஒருநாள் தோழியைச் சந்திக்க சேகர் அங்கிள் வீட்டுக்குச் சென்றேன். அப்போது வீட்டில் அவர் மட்டும் இருந்தார். நான் திரும்பிச் செல்ல வாசல் வரை வந்தேன். அப்போது சேகர் அங்கிள், உன் ஃப்ரெண்டு இல்லன்னா உடனே வீட்டுக்குப் போய்விடுவியா?' என்று பாசமாகக் கேட்டார். அதற்கு நான்,ஆமாம்’ என்று கூறினேன். உடனே அவர், நான் வீட்டில் இருக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலையா' என்று கேட்டார். பின்னர் அவரோடு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். என் படிப்பு, குடும்பம் ஆகியவற்றை குறித்து சேகர் அங்கிள் விசாரித்தார். அதற்கு நானும் பதிலளித்தேன். அடுத்து தன்னுடைய மகள் (என்னுடைய தோழி) குறித்து விசாரித்தார். அதற்கு,நானும் அவளும் திக் ஃப்ரெண்ட்ஸ்’ என்று கூறினேன். அதன்பிறகு அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பிவந்துவிட்டேன்.

“ஒருகட்டத்தில் அவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினேன். சில காரணங்களுக்காக அவர் சொல்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை. இதையடுத்து எங்கள் இருவரின் பழக்கத்தை தோழியின் குடும்பத்தினரும் என் வீட்டில் உள்ளவர்களும் கண்டித்தனர். ஆனால் நானும் சேகர் அங்கிளும் எதையும் கண்டுகொள்ளவில்லை. எங்களின் இருவரின் பழக்கம் 4 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.”

“ஒருகட்டத்தின் அவரின் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது. அவரைத் தவிர மற்ற ஆண்களுடன் நான் பேசுவதைக் கண்டித்தார். என் சுதந்திரத்தில் அவர் தலையிடத் தொடங்கியதும் எனக்கும் அவருக்கும் சண்டை வரத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையில் எனக்கு திருமணம் செய்ய எங்கள் வீட்டில் வரன் தேடினர். அதற்கும் சேகர் எதிர்ப்பு தெரிவித்தார். `நான் உன்னை 2வதாக திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறினார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.”

“உங்கள் வயது என்ன, என் வயது என்ன?’ என்று சேகரிடம் கேள்விகேட்டேன். அதற்கு அவர், உனக்காக நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரத் தயார் என்று கூறினார். ஆனால் எனக்கு சேகரைத் திருமணம் செய்ய விருப்பமில்லை. அதனால் அவரிடமிருந்து விலக ஆரம்பித்தேன். பேசுவதைத் தவிர்த்தேன். ஆனால் சேகர், தினமும் எனக்கு போன்கால் செய்து டார்ச்சர் செய்தார். ஒருகட்டத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.”

இதனால், சேகரைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். அவரை எப்படி கொலை செய்வது என்பது தொடர்பாக இணையதளத்தில் விவரங்களைத் தேடினேன். இதனைத் தொடர்ந்து திருவொற்றியூரில் உள்ள கடையில் கத்தி ஒன்றை வாங்கினேன். அப்போது சேகர், கண் விழித்திருக்கும் போது அவரைக் கொலை செய்ய முடியாது. அதனால் கண்ணை மூட என்ன வழி என்று மீண்டும் நெட்டில் தகவல்களைத் தேடினன். அப்போது, கண்களில் பசையைப் போட்டுவிட்டால் திறக்க முடியாது என்ற யோசனை வந்தது. உடனே பசையும் வாங்கினேன்.

இதையடுத்து சேகருக்கு போன் செய்து அன்பாகப் பேசினேன். உடனே உங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். நான் பாசமாகப் பேசியதை நம்பி சேகர் வந்தார். இருவரும் பைக்கில் அடையாறு வரை சென்றோம். பின்னர் இரவு 9 மணியளவில் அம்மணி அம்மன் திட்ட சாலைக்கு வந்தோம். துறைமுகம் குடியிருப்புப் பகுதியில் எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்காது. அதனால் அந்த இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் பேசினோம். அப்போதும் என்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சேகர் கூறினார்.

அதற்கு நான், `உங்களுக்குப் பிறந்தநாள் என்பதால் இப்போது சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்கப் போகிறேன். அதனால் கண்களை மூடுங்கள்’ என்று சேகரிடம் கூறினேன். உடனே அவர் என்ன கிஃப்ட் என்று ஆர்வமாகக் கேட்டார். கண்ணை மூடினால்தான் கொடுக்க முடியும் என்றேன். உடனே அவரும் கண்களை மூடிக்கொண்டார். கையில் மறைத்து வைத்திருந்த பசையை சேகரின் கண்களில் தடவினேன். அப்போது அவர் என்னது பிசுபிசுப்பாக இருக்கிறது என்று கேட்டார். அதற்கு நான் அமைதியாக இருங்கள் என்று கூறியபடி பசையைக் கண்களிலும் உதடுகளிலும் தடவினேன். அடுத்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேகரின் கழுத்தை அறுத்தேன். அவர் என்னைத் தள்ளிவிட்டுவிட்டு தப்பி ஓட முயன்றார். பசையால் அவரது கண்களைத் திறக்க முடியவில்லை, சத்தமும் போட முடியவில்லை.

கழுத்திலிருந்து ரத்தம் வெளியேறியது. அந்த ரத்தம் என் சுடிதாரின் மீதும் விழுந்தது. நடுரோட்டில் துடிதுடித்து உயிருக்குப் போராடினார். நான் அங்கிருந்து ரத்தம் படிந்த கத்தி, மீதமுள்ள பசை ஆகியவற்றுடன் வீட்டுக்குச் சென்றேன். வீட்டில் யாரின் கண்களிலும்படாமல் பாத்ரூமுக்குச் சென்று குளித்தேன். பின்னர் ரத்தக் கறைபடிந்த கத்தி, சுடிதாரையும் குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்தேன். ஆரம்பத்திலேயே வீட்டில் கண்டித்தார்கள். நான் கேட்கல, அதனால் இப்போது கஷ்டப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்த கொலை சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மன் சேகரை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அம்மன் சேகரின் செக்ஸ் தொல்லை தொடர்பாக போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணை முடிந்ததும் இளம்பெண்ணை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கிறார்கள்.


LATEST FEATURES:

Tag: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *