இளம் இயக்குனர் விவேக் ஆரியன் சாலை விபத்தில் மரணம்
பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் திரிஷ்யம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விவேக் ஆர்யன், இவர் கடந்த ஆண்டு ஓர்மாயில் ஒரு சிஷ்ரம் படத்தை இயக்கியுள்ளார், மேலும் ஜீது ஜோசப்பின் மெமரிஸ் மற்றும் த்ரிஷா ஆகிய படங்களையும் இணைந்து இயக்கியுள்ளார்.
திரிபுனிதுராவில் நான்கு ஆண்டுகளாக வசித்து வரும் விவேக் ஆரியன் விளம்பர இயக்குநராகவும் பணியாற்றினார். இரண்டு தமிழ் குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
டிசம்பர் 22-ம் தேதி தனது மனைவி அமிர்தாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த விவேக் ஆர்யன், சாலையின் குறுக்கே வரும் நாய் மீது மோதுவதை தவிர்க்க முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விவேக் ஆர்யன் மற்றும் அவரது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இருவரும் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விவேக் ஆர்யனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விவேக் ஆர்யன் மரணமடைந்தார். அவரது மரணம் குடும்பத்தாரையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Comments are closed.