Thursday, September 10, 2026
LatestNEWS

CAA-க்கு எதிராக போராட்டம் – தமிழகம் முழுவதும் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி

CAA, NRC மற்றும் NPR-க்கு எதிராக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இன்று தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குடியுரிமை சட்டத்திருத்துக்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 600 போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அனுமதியின்றி இன்று போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை முதலே போராட்டக் காரர்கள் கடற்கரை சாலையில் திரண்டனர். இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமரா மூலம் கூட்டத்தை கண்காணிக்க போலீசார் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.



Comments are closed.