நேர்காணலுக்கு வராத சைதை துரைசாமி வேட்பாளராக வாய்ப்பு!

தமிழக சட்டசபை தேர்தலில் 171 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

இதற்கிடையில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் அ.தி.மு.க. தீவிரமானது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை பல கட்டங்களாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது.

இந்தநிலையில் அ.தி. மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

கட்சிலிருந்து ஒதுங்கி இருந்த அதிமுக வேட்பாளர் நேர்காணலில் இடம்பெறாத சென்னை முன்னாள் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு சைதாப்பேட்டை வேட்பாளராக வாய்ப்பு வழங்கி உள்ளது. மேயர் துரைசாமி தரப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தாலும், அவர் நேர்காணலில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/