அதிமுகவுடன் 6 தொகுதிகளிலும் மதிமுக நேரடி மோதல்
திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 6 தொகுதிகள் இன்று வெளியாகின. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தவண்ணம் உள்ளன. அதன்படி, திமுக தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் இன்று இறுதி செய்யப்பட்டன. அதன்படி மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம், அரியலூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது.
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் எஸ்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார். வாசுதேவநல்லூரில் ஏ.மனோகரன், சாத்தூரில் ஆர்.கே.ரவிச்சந்திரன், பல்லடத்தில் எம்எஸ்எம் ஆனந்தன், அரியலூரில் தாமரை எஸ்.ராஜேந்திரன், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் போட்டியிடுகின்றனர்.
I am regular reader, how are you everybody?
This paragraph posted at this web site is genuinely fastidious.
If some one desires to be updated with latest technologies then he must be visit this web site and
be up to date daily.
Hey are using WordPress for your blog platform?
I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any html coding knowledge to make your own blog?
Any help would be greatly appreciated!
My site … tracfone 2022