நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ம் தூக்கு

டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயாவை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 வாலிபர்களால் பாலியல்வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதி ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துவிட்டார்.

இந்தவழக்கில், அக்ஷய் குமார் மட்டும் இதுவரையில் மேல்முறையீடு செய்யாமல் இருந்தார். அக்ஷய் குமார் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில், குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்பயாவின் தாயார் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட வாரண்ட் பிறப்பித்தார்.



Comments are closed.

https://newstamil.in/