ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம் – தீபிகா ஆதரவு; கோபத்தில் பா.ஜ.க

நாடு முழுவதும் CAA எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் டில்லியில் ஜவஹர்லால்நேரு பல்கலை (ஜேஎன்யு) பல்கலையில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு ஹிந்து ரக்ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதற்காக ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக சினமா நட்சத்திரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவதை மக்கள் கோபத்துடன் விமர்சித்த வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அங்கு சென்ற நடிகை தீபிகா படுகோனே, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார், இன்று மாலை 7.30 மணி அளவில் ஜேஎன்யு வளாகத்திற்கு வந்துள்ளார். அங்கு போராட்டம் நடத்தும் மாணவர்களை சந்தித்து பேசியுள்ளார். 15 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.

இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. #ISupportDeepika என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதனால் கோபமான பாரதிய ஜனதா கட்சியினர் தீபிகா படுகோன் படங்களை புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.


154 thoughts on “ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம் – தீபிகா ஆதரவு; கோபத்தில் பா.ஜ.க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/