சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது கோரத்தாண்டவத்தை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்கு இந்தியாவில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கர்நாடக மாநிலத்தில் 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்தார். இதை கர்நாடக சுகாதாரத்துறையும் உறுதிப்படுத்தியது.