ரயில் மோதிய ரயிலுக்கு அடியில் மூதாட்டி உயிருடன் மீட்பு! – வீடியோ

சென்னையில் ரயில் மோதி என்ஜீனில் சிக்கிய மூதாட்டி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மூதாட்டியை ரயில்வே போலீசார் உயிருடன் மீட்டனர், இன்று காலை சென்னை – பெங்களூரு டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

ரயில் பேசின் பிரிட்ஜ் நிலையத்தை கடந்தபோது மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். இதை கண்ட ரயில் ஓட்டுநர் பிரேக் பிடுத்தும், லேசான வேகத்தில் சென்ற ரயில் மூதாட்டியின் மேல் மோதியுள்ளது

இதனால் தண்டவாளத்திலேயே விழுந்த மூதாட்டி ரயில் எஞ்சினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். சம்பவத்தை அறிந்துகொண்ட ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு, கீழே வந்து பார்த்துள்ளார்.

சில நிமிடங்களில் அந்தப் மூதாட்டி ரயில் இன்ஜினில் இருந்து மீட்கப்பட்ட போது அவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுComments are closed.

https://newstamil.in/