கடலுக்கடியில் எரிமலை வெடித்தால்? – வைரலான வீடியோ!
நியூஸிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நியூஸிலாந்து ஒயிட்ஸ் தீவு எரிமலை குழம்பாக வெடித்து கிளம்பிய காட்சி சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது.
ஆனால் இந்த வைரல் வீடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என தற்போது தெரிந்த பின் சமூக வலைதள ஆர்வலர்கள் சற்று உஷார் நிலைக்கு மாறியுள்ளனர்.
இவ்வாறு இருக்க சமீபத்தில் கடந்த டிச.9ல் நியூஸிலாந்து ஒயிட்ஸ் தீவில் எரிமலைக்குழம்பு வெடித்து வெளியேறியது. இதில் சிக்கி சுற்றுலா பயணிகள் 17 பேர் பலியாகினர். இந்த எரிமைலை குழம்பு வெடித்து கிளம்பிய வீடியோ காட்சியை டிவானி பாப்லி என்பவர் டுவிட்டரில் பதிவிட்டார்.
சமூகவலை தளங்களில் லைக்குகளை பெறுவதற்காக துயரசம்சம்பவத்திலும் இவ்வாறு உள்ளம் குளிர நினைப்பது அபத்தமானது என பலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.