சிலிண்டர் விலை கடும் உயர்வு; சென்னையில் விலை ரூ.881!

மானியமில்லாத சிலிண்டர்கள் விலை இன்று முதல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உள்ளது.

இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்யும் இண்டேன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், “டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.5 உயர்த்தப்பட்டு ரூ.858.5 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்படும்.Comments are closed.

https://newstamil.in/