Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

21 வருடங்களுக்கு முன்பு அஜித் – ஷாலினிக்கு கொடுத்த சத்தியம்!

நடிகர் அஜித் அமர்க்களம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் சினிமா உலகில் பலரும் பார்த்து வியக்கும்படி வெற்றிகரமான நடிகராகவும் சினிமா வட்டாரங்களில் பலரும் பாராட்டும்படியான மாண்புமிகு நடிகராகவும் திகழ்வதற்கு பின்னணியாக இருப்பவர் அவருடைய மனைவி ஷாலினி என்றால் அது மிகையல்ல.

நாளை காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த காதல் தம்பதி குறித்த ருசிகரமான தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது 21 வருடங்களுக்கு முன்பே தல அஜித்திடம் ஷாலினி சத்தியம் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

திருமணத்திற்கு பிறகு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க கூடாது, எவ்வளவு பிசியாக நடித்தாலும் மாதத்தில் 15 நாட்கள் ஷூட்டிற்கு, 15 நாட்கள் குடும்பத்திற்கு என்று ஒதுக்க வேண்டும் என்பது தான் அது.

அதை இன்றளவும் கடைபிடித்து வரும் தல அஜித், சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வலிமை பட ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி வந்தார். அதே போல் மகன், மகளின் பள்ளி விழாக்கள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.



Comments are closed.