திடீரென திருமணம் செய்த VJ திவ்யா
தொகுப்பாளர்கள் என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சொல்லப்போனால் டிடி, கோபிநாத், ஜெகன், மாகாபா, பிரியங்கா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் திவ்யா.
திவ்யா அவர்கள் முதலில் வி.ஜே.வாக தான் அறிமுகமானார். சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமான வி.ஜே.வாக திவ்யா மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அதோடு பத்து வருடங்களாக இவர் மீடியா துறையில் தான் பயணித்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணி ஆற்றி உள்ளார்.
பின்னர் மலையாள மொழியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் பணிபுரிந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு பாடகியும் ஆவார். மேலும், இவர் வில்லு, தீராத விளையாட்டுப் பிள்ளை, ரெட்டி உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். சமீப காலமாகவே சின்னத்திரை, சினிமா என எதிலுமே காணாமல் இருந்தார் திவ்யா.
இது குறித்து பலரும் வினவினார்கள். இந்நிலையில் தான் இவர் குறித்து ஒரு சந்தோசமான செய்தி சமூக வலைத்தளங்களில் வந்து உள்ளது. அது என்னவென்றால் தொகுப்பாளினி திவ்யா அவர்களுக்கு கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி திருமணம் நடந்து உள்ளது. மேலும், தொகுப்பாளினி திவ்யா அவர்கள் தனது நீண்ட நாள் நண்பரான சிபு தரகன் என்பவரை காதலித்து வந்து உள்ளார்.
பின் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷியில் உற்சாகமாக கொண்டாடி உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் தொகுப்பாளினி திவ்யாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.