பழங்குடியினர் சிறுவனை கூப்பிட்டு காலில் செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
நீலகிரி: பழங்குடியினர் சிறுவனை கூப்பிட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு நிலவியது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் நடந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்க வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுவனும், செருப்பின் பெல்டை கழற்றிவிட, பின்னர் சீனிவாசனின் உதவியாளர் செருப்பை முழுவதுமாக கழற்றிவிட்டார், பத்திரிக்கையாளர் புகைப்படம் எடுத்ததால் கட்சியினர் மறைத்து நின்றனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Comments are closed.