ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. தற்போது அதற்கான விடையை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் எனவும் 2024ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் கூறுகின்றனர். ஜெய்பீம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநருடன் ரஜினிகாந்த் கைகோர்த்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/