குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த விபத்து

மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதில் தான் ஒரு சிறிய விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக மணிமேகலை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. சமீபத்தில் இதை படித்தேன். நன்றாக இருந்தது.

எனக்கு சிறிய விபத்து நடந்தது. ஆனால் தற்போது எல்லோரும் நலம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும், மற்ற நிகழ்ச்சிகளை ஒரு வாரமும் மிஸ் செய்வேன். எனது குழுவினரையும் மிஸ் செய்வேன். முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து தூக்குங்க” என்று தெரிவித்துள்ளார்.

மணிமேகலையின் இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவர் நலமடைந்து திரும்ப வேண்டும் என்று தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


79 thoughts on “குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/