Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

நான் இசையமைத்த பாடலில் மாற்றம்: சர்ச்சை கிளப்பிய சந்தோஷ் நாராயணன்!

ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான “அந்தாதுன்” திரைப்படம், 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன், பிரசாந்தின் தந்தை, பெற்றுள்ளார். “பொன்மகள் வந்தாள்” படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், “அந்தாதுன்” தமிழ் ரீமேக்கை முதலில் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

படப்பிடிப்பு 2021 இல் தொடங்கி, 2022 இல் முடிக்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியீடு தாமதமாயின. இந்நிலையில், படக்குழு வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடும் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இயக்குநராக தியாகராஜன் தான் பொறுப்பேற்றுக்கொண்டார். “அந்தகன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு ரவி யாதவ், மற்றும் வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர்.

அந்தகன் படத்தின் ஆந்தம் பாடல் நேற்று வெளியிடப்பட்டது, அதை நடிகர் விஜய் வெளியிட்டார். இந்த நிலையில், இசையப்பாளர் சந்தோஷ் நாரயாணன் இந்த இசை நான் கொடுத்தது கிடையாது என கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இசையை பதிவேற்றம் செய்துள்ள மியூசிக் லேபிள் நிறுவனத்தையும் வடிவேலு காட்சியை பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார்