ஓட்டம் எடுக்கும் நயன்தாரா; 10 ஆண்டுகள் வரை சிறை?

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதி நயன்தாரா விக்னேஷ் சிவன் அருவி அறிவித்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் சரியாக நான்கே மாதத்தில் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி விட்டதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் மீது வழக்கறிஞர் சங்க தலைவர் என்பவர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற நிலையில்தான் செயற்கை கருத்தரிப்பு முறையை கடைபிடிக்க முடியும் என்றும் ஆனால் திருமணமான நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா தெரிவித்திருப்பது சட்டத்தை மீறிய செயல் என்றும்.

இது இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதால், சட்டவிரோதமாக வாடகை தாய் முறையை ஊக்குவிக்கும் தம்பதி நயன்தாரா, விக்னேஷ் சிவன், வாடகை தாய் மற்றும் வாடகை தாய் சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஆகியோரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் விக்னேஷ் நயன்தாரா தம்பதிகள் சட்ட விதிகளை மீறி இருந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் கூறியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Comments are closed.

https://newstamil.in/