ஊரடங்கு மே 3 வரை நீட்டிப்பு – பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தற்போதைய ஊரடங்கு மே 3 வரை பிரதமர் நரேந்திர மோடி இன்று நீட்டித்து, நாட்டின் ஏழ்மையானவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

பிரதமர் மோடி தனது உரையில் ஏப்ரல் 20 க்குப் பிறகு முன்னேற்றம் காண்பிக்கும் பகுதிகளில் சில அத்தியாவசிய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்றார்.

நாடு முழுவதும் 600 மருத்துவமனைகள் கொரோனாவுக்காக சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மருத்துவ வசதிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுவருகிறது. இளம் ஆய்வாளர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

மேலும், COVID-19 ஒரு புதிய பகுதிக்கு பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய கடுமையான ஊரடங்கு அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதற்காக குடிமக்கள் விடாமுயற்சியுடன் ஒவ்வொரு சிரமத்தையும் எதிர்கொண்டனர் என்றார். “ஊரடங்கு போது ‘வி தி பீப்பிள் ஆஃப் இந்தியா’வின் சக்தி நாட்டில் காணப்படுகிறது,” என்று அவர் கூறினார்.



Comments are closed.

https://newstamil.in/