சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக 18 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் சிட்னியில் நாளை முதல் தொடங்குகிறது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது. இந்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் விவரம் வருமாறு:- ரகானே (கேப்டன்), ரோகித் சர்மா ( துணை கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பாண்ட், ஜடேஜா, அஸ்வின் , ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், நவ்தீப் சைனி.

இந்திய அணியில் அறிமுக வீரராக நவ்தீப் சைனி நாளை காண்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.


1,603 thoughts on “சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை