டிக் டாக் சூர்யா அட்டூழியம் – ரூ.5 லட்சம் வேணுமாம் எதுக்குன்னு பாருங்க

நடிப்பு திறமை என அரைகுறை ஆடையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா என்ற அம்மணி டிக்டாக்கில் மிக பிரபலம்..!

காதல் பாட்டு, குத்து பாட்டு, சோகப்பாட்டு என அம்மணி டிக்டாக்கில் காட்டாத நவரசங்களே கிடையாது

அம்மணியின் வீடியோக்களுக்கு லைக்குகள் ஏறிக் கொண்டே போக அம்மணி உடுத்தும் ஆடைகள் இறங்கிக் கொண்டே போனது தான் விபரீதத்தின் முதல் சுழி..!

ஒரு மகன் உள்ள நிலையில் சூர்யாவின் இந்த லோக்கல் சேட்டையால் மிரண்டு போய் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அம்மணியை கலாய்ப்பது போல அறிமுகமாகி அம்மணியுடன் நெருக்கமானார் டிக்டாக் கோமாளி ஜிபி முத்து..!

இருவரும் சேர்ந்து டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவுக்கு பிரபலமாகினர். அதன் பின்னர் சூர்யா, இழுத்து போர்த்தி நடித்தாலும், ஏராளமான டிக்டாக் ரோமியோக்களுடன் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் அவர்கள் மூலம் பாலியல் தொல்லைகள் அதிகரிக்க டிக்டாக்கில் உள்ள நபர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்து வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிக்டாக் அடிமைகளை அதிரவைத்தார் சூர்யா..!

அந்த வீடியோவில், டிக்டாக்கால் தனது கணவரை பிரிந்தது முதல் தற்போது கோடம்பாக்கத்தில் நண்பர்கள் செய்யும் தொந்தரவுகள் வரை அனைத்தையும் கண்ணீர் மல்க கூறியுள்ளார் சூர்யா

அவரது இந்த வீடியோவை பார்த்து பலரும் அவருக்கு உதவி செய்வதாக கூறி ஆறுதலுடன் அறிவுரையும் வழங்கியதால், தன்னுடைய கண்ணீர் வீடியோவை டிக் டாக்கில் இருந்து நீக்கினார் சூர்யா

தனக்கு தொடர்ந்து அறிவுரை சொல்லும் டிக்டாக் உத்தமர்களுக்கு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூர்யா, அதில் தான் அடக்க , ஒடுக்கமாக வாழனும் என்றால் தனக்கு இருக்கும் கடனை அடைக்க 5 லட்சம் ரூபாய் தந்து விட்டு புத்தி சொல்லுமாறு தெரிவித்துள்ளார்


179 thoughts on “டிக் டாக் சூர்யா அட்டூழியம் – ரூ.5 லட்சம் வேணுமாம் எதுக்குன்னு பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/