Friday, September 11, 2026
LatestNEWS

ஈஷா யோகா மையத்தில் 12 அடி ராஜநாகம் – வீடியோ

ஈஷா யோகா மையத்திற்குள் 12 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று நேற்று வந்துள்ளது. இதை பார்த்த ஈஷா யோகா மையத்தின் தன்னார்வலர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பூளுவாம்பட்டி சரக வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

வனத்துறையினர், அந்த பாம்பை லாவகமாக பிடித்து சிறுவாணி அணைக்கட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர். முன்னதாக, அந்த ராஜ நாகப்பாம்பை ஈஷா யோக மையத்தின் தன்னார்வலர் ஒருவர் கையில் பிடித்து வைத்திருக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Comments are closed.