டாட்டூவால் நடந்த கொலை – கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை புழல் காவல் நிலையத்துக்கு ஓடி வந்த வெற்றிவீரன், “எனக்கும் என் மனைவிக்கும் நேற்றிரவு முழுவதும் சண்டை. அந்தச் சண்டை அதிகாலை வரை நீடித்தது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் கேட்கல. அதனால்தான் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்துவிட்டேன்” என்று பதற்றத்துடன் கூறியுள்ளார்.

சென்னை புழலில் 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்த மனைவி சஜினியை சமரசப்படுத்திய கணவர், 15 நாள்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போதுதான் அவள் உடம்பில் டாட்டூவை பார்த்துள்ளார் “டாட்டூ ஏன் குத்தினாய்.. இதற்கு அர்த்தம் என்ன? உடம்பு பூரா எதுக்கு டாட்டூ குத்தினே?” என்று கேட்டேன்.. விடிய விடிய சண்டை நடந்தது.. என்னால் சஜினி சொல்லும் காரணத்தை ஏற்கவே முடியவில்லை.. நான் சொல்வதையும் சஜினி கேட்பதாக இல்லை.. அந்த ஆத்திரத்தில்தான் கத்தி எடுத்து குத்தி கொன்றேன்” என்றார்.

இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், “வெற்றிவீரனுக்கும் சஜினிக்கும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருநின்றவூர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்துவருகிறார். 2 வது மகள் பள்ளியில் படித்து வருகிறார்.

வெற்றிவீரன், அம்பத்தூர் பாடியில் உள்ள பிரின்ட்டிங் அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். சஜினி, அழகுக் கலை நிபுணராக இருந்தார். இவர்களின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகச் சென்ற நிலையில் சஜினியின் மீது வெற்றிவீரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சந்தேக நோயால் அடிக்கடி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தினமும் சண்டை, குடும்பத்திலும் வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை எனக் கருதிய சஜினி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தைப் பிரிந்து தாய் வீடான கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டார். பின்னர், மகள்களுடன் வெற்றிவீரன் குடியிருந்து வந்துள்ளார்.

15 நாளைக்கு முன்புதான் சஜினியை நான் நேரில் சென்று பார்த்து சமாதானம் செய்தேன்.. “இனிமேல் சண்டை போட மாட்டேன்.. நம்ம பொண்ணுங்களோட எதிர்காலம்தான் முக்கியம்.. அவங்களுக்காக நாம ஒன்னா வாழலாம் வா” என்று சொன்னேன்.. சஜினியும் குடும்பம் நடத்த வந்தாள்.

இந்தநிலையில், நேற்றிரவு இருவருக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது. விடிய விடிய சண்டை நடந்துள்ளது. ஆத்திரமடைந்த வெற்றிவீரன், சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து சஜினியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்துள்ளார்.Comments are closed.

https://newstamil.in/