Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

யார் அடுத்த பட இயக்குனர் – அறிவிக்கும் விஜய்?

விஜய் நடிப்பில் மாஸ்டர் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தனது அடுத்த படத்தின் இயக்குநரை நடிகர் விஜய் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்டுவரும் இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சிலர் மற்றும் பங்குபெறவுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யை சந்தித்து சுதா கொங்கரா, ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் கதை சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கான விடை மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மாஸ்டர் படப்பணிகளை முடித்துவிட்டு ஓய்வுக்காக வெளிநாடு சென்றிருந்த நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.


Comments are closed.