பெண்ணாக மாறிய நடிகர் – யார் என்று தெரிகிறதா?
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், தனது அடுத்த படமான லூடோவிற்காக முற்றிலுமாக பெண் வேடமிட்டு ஆளே மாறியுள்ளார்.
முன்னணி பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் அப்படியே மேக்கப்பில் பெண்ணாக மாறி அனைவரையும் அசர வைத்துள்ளார். தனது நடிப்பு திறமைக்காக அதிகம் பாராட்டப்பட்டவர் நடிகர் ராஜ்குமார் ராவ். அனுராக் பாசு இயக்கும் லுடோ என்ற புதிய படத்திற்காக அவர் பெண் கெட்டப் போட்டுள்ளார்.
பாலிவுட்டின் மிக திறமையான நடிகர்களில் ராஜ்குமார் ராவும் முக்கியமானவர். அவர் நடிப்பில் வெளியான குயின், நியூட்டன், கை போச்சே, டி டே, ராப்டா, சிட்டி லைட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் விருதுகளை வாரி குவித்துள்ளன.
அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்ட பிறகு ரசிகர்களே குழப்பம் அடைந்துவிட்டனர். அவர் பிரபல நடிகை க்ரிதி சனோன் அல்லது ஆலியா பட் போல் இருப்பதாக கிண்டல் செய்தும் வருகின்றனர்.