கொரோனா வைரஸ் கறிக்கோழி வழியாக பரவுமா? கதறும் விற்பனையாளர்கள்!
கறிக்கோழி வழியாக கொரோனா பரவும் என்று சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிய வதந்தியால், கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளன, கடந்த 3 வாரங்களில் மட்டும் இந்திய கோழிப்பண்ணைத் தொழில் சுமார் ஆயிரத்து 310 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
கொரனா வைரஸ் பெங்களூரில் பிராய்லர் கடைகளில் உள்ள கோழிகளை தாக்கியது, என்று வீடியோ ஒன்று உலவுகிறது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், கறிக்கோழி வழியாக கொரோனா வைரஸ் பரவும் என்று கூறப்படும் வதந்திகள் உருவாகின.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சராசரியாக 70 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழியின் பண்ணை விலை கொரானா புரளியை தொடர்ந்து கிலோவுக்கு 35 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
எனினும் இன்னும் இந்தத் தகவல் உறுதிசெய்யப்படாத நிலையில், கடந்த 3 வாரங்களில் மட்டும் இந்திய கோழிப் பண்ணை தொழிலில் சுமார் 1,310 ரூபாய் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோழி விற்பனை இந்த நிலையிலேயே நீடித்தால், பண்ணையாளர்கள் தங்களது உற்பத்தியை குறைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதுடன், வரும் ஏப்ரலில் இருந்து கோழியின் விலை அதிகரிக்கும் என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Right now it seems like Movable Type is the preferred blogging platform out there right now. (from what I’ve read) Is that what you are using on your blog?