2021ம் ஆண்டு தேர்தல் – பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த ஸ்டாலின்

தேர்தல் வியூக சேவை வழங்கும் பிரசாந் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக இளைஞர்களை ஐ-பேக் நிறுவனத்தின் வழியே எங்களுடன் பணிபுரிய உள்ளனர் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடும் முன்னணி நிறுவனம் ஐ-பேக். இதன் தலைவராக பிரசாந்த் கிஷோர் உள்ளார். இவர், பிரதமர் மோடி, நிதிஷ் குமார் என பல்வேறு தலைவர்களுக்காக பணியாற்றி உள்ளார்.

2021 பேரவை தேர்தலுக்கான திமுகவின் திட்டங்களை செழுமைப்படுத்த ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக கைகோர்த்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டில்லி சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சியுடன் அவர் கைகோர்த்துள்ளார்.


6 thoughts on “2021ம் ஆண்டு தேர்தல் – பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/