மு.க.ஸ்டாலின் தி.மு.கவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தி.மு.க மட்டும் தனியாக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் ட்விட்டர் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்டாலின் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர்.

இதில் தி.மு.க., சட்டசபை தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தி.மு.க, பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். பின்னர் ஸ்டாலினுக்கு மூத்த நிர்வாகிகள் பாராட்டும்,வாழ்த்தும் தெரிவித்தனர்.


Comments are closed.

https://newstamil.in/