Thursday, September 10, 2026
LatestNEWS

50 பைசா பாக்கி – ‘கட்டவில்லை என்றால் நடவடிக்கை’ எஸ்.பி.ஐ வங்கி நோட்டீசும்

ராஜஸ்தானில் 50 பைசா நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வீடு ஒன்றில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடிக்கணக்கில் கடன்களை வாங்கிவிட்டுத் தலைமறைவாகி வரும் கோடீஸ்வரர்கள் கதையெல்லாம் நம் நாட்டுக்கு புதிதல்ல. ஆனால் 50 பைசா பாக்கிக்காக ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர குமார், ஸ்டேட் வங்கியில் ஜன்தன் திட்டத்தின்கீழ் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், வங்கிக்கு செலுத்த வேண்டிய 50 பைசாவை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் அவருக்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும், எதற்கு வம்பு கட்டி விடுவோம் என்று 50 பைசாவை செலுத்த வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் அவரிடம் 50 பைசாவை வங்கி ஊழியர்கள் வாங்க மருத்துள்ளதாக ஜிதேந்திரகுமாரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.


Comments are closed.