மாஸ்டர் அப்டேட் – ரசிகர்கள் இல்லாமல் இசை வெளியீட்டு விழா?

கல்லூரி பேராசியராக இளமையான தோற்றத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் இசைவெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக நேற்று படக்குழு அறிவித்தது. இதையடுத்து மார்ச் மாதம் முழுவதும் மாஸ்டர் படத்தின் அப்டேட் மாசமாக இருக்கும் என ரத்னகுமார் ட்வீட் போட்டுள்ளார்.

மார்ச் 15-ம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழாவை பெரிய ஹோட்டல் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில், சர்கார் உள்ளிட்ட படங்களின் இசைவெளியீட்டு விழாக்களில் ரசிகர்கள் பங்கேற்ற நிலையில் மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா ரசிகர்கள் இல்லாமல் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இசைவெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/