இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதுாக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (49 கி.கி.,) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பெண்களுக்கான பளுதுாக்குதல் 49 கி.கி., எடைப்பிரிவில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 87 கிலோ, ‘கிளீன் அன்ட் ஜெர்க்’ பிரிவில் 115 கிலோ என, மொத்தம் 202 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் மீராபாய் சானு, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தவிர, ஒலிம்பிக் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம்.
Comments are closed.