பாடகி சுஷ்மிதா தற்கொலை; கணவர் மீது புகார்!

கன்னட பாடகி சுஷ்மிதா ராஜே தற்கொலை செய்து கொண்டார், அதற்காக அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்துள்ளார்.

கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி தான் சுஷ்மிதா, சில ஆண்டுகளுக்கு முன்பு சரத்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுஷ்மிதா. திருமணத்திற்கு பிறகு இவர்கள் வசிக்கும் வீட்டில் சரத்துக்குமாரின் பெரியம்மா வைதேவி மற்றும் சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

ஆரம்ப கால கட்டத்தில் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருந்தாலும் சில நாட்கள் கழித்து இவர்கள் இடையே கருத்து வேறுபாடு வர துவங்கியுள்ளது. சுஷ்மிதா அவர்களை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளார்கள் சரத்துக்குமார் குடும்பத்தினர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை, சுஸ்மிதா நாகரபாவிக்கு அருகிலுள்ள தனது தாயார் வீட்டில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இப்போது அவரது தாய் ஷரத் மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு வரதட்சணைக்காக துன்புறுத்தியதாகக் கூறி நீதி கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

சுஷ்மிதா உடல் அளவிலும் மனதளவிலும் மிக பெரிய காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இதனை குறித்து இவர்களுக்கு இடையே மிக பெரிய பிரச்சனை ஏற்பட்டதால் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் சுஷ்மிதா.

மேலும் இறப்பதற்கு முன் வாட்ஸப்பில் அனுப்பிய கடிதத்தில் சுஷ்மிதா குறிப்பித்திருந்தது : அம்மா என்னை மன்னித்து விடு, எனது கணவர் அவரது பெரியம்மா பேச்சை கேட்டு எனக்கு வரதற்சனை கொடுமை செய்து வந்தார். நான் பல முறை அவர்களின் காலில் விழுந்தும் அவர்கள் அதை கேட்க வில்லை. இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் அந்த வீட்டில் கூட தற்கொலை செய்ய முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை, பிறந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டால் தான் சரியான ஆதாரங்கள் கிடைக்கும் என்று இங்கு வந்தேன்.

மேலும் இதனை வைத்து கொண்டு அந்த நபர்களுக்கு மிக பெரிய தன்னடனையை வாங்கி கொடுங்கள் அப்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும் என்று குறிப்பிட்டிருந்தார் சுஷ்மிதா. இதனை குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.


146 thoughts on “பாடகி சுஷ்மிதா தற்கொலை; கணவர் மீது புகார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/