நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன

இந்தியாவிலும் பெரிய அடி விழுந்துள்ளது, இதனால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்க பல நடிகர்கள், நடிகைகள் நன்கொடை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தமாக ரூ.20 லட்சம்), அளித்துள்ளார் விஜய். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், பெப்சி ஊழியர்களின் நலனுக்காக விஜய் எல்லோருக்கும் சிறப்பு கூப்பன் ஒன்று கொடுக்கவுள்ளாராம். அதை வைத்து வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கலாமாம். அட இதுக்கூட சூப்பர் தான்.



Comments are closed.

https://newstamil.in/